Home /News /tamil-nadu /

அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...!

அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னேற்ற அமைப்பின் தலைவராக உள்ள கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், திரூப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவில் உள்ள மங்களம் சாலையில் காவல் குடியிருப்புக்காக நில வருவாய் அதிகாரி கடந்த 2001ம் ஆண்டு 85.1 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் 4.5 செண்ட் நிலம் சாலைக்காகவும், 18.6 செண்ட் நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பபட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னேற்ற அமைப்பின் தலைவராக உள்ள கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், திரூப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவில் உள்ள மங்களம் சாலையில் காவல் குடியிருப்புக்காக நில வருவாய் அதிகாரி கடந்த 2001ம் ஆண்டு 85.1 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் 4.5 செண்ட் நிலம் சாலைக்காகவும், 18.6 செண்ட் நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பபட்டுள்ளது.

Also read... சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

இந்த மசூதி அருகே 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இருப்பதாகவும், தற்போது இந்த மசூதியை விரிவாக்கம் செய்ய சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் மசூதி விரிவாக்கத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Also read... அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி ,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு மசூதி விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை விதித்தும், மனுதாரரின் மனு மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 3 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி