Home /News /tamil-nadu /

டிரைவர் அண்ணே கியர் ராடு எங்கண்ணே.. பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் அரசுப்பேருந்து

டிரைவர் அண்ணே கியர் ராடு எங்கண்ணே.. பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் அரசுப்பேருந்து

திருப்பூர் அரசுப்பேருந்து

திருப்பூர் அரசுப்பேருந்து

திருப்பூர் பணிமனைக்குட்பட்ட  குறிப்பிட்ட அரசு பேருந்தின் கியர் ராடு பழுதடைந்துள்ளதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பேருந்து சேவைகளும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகின்றன.

பராமரிப்பு இல்லாமல் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். திருப்பூர் -குமுளி வழித்தடத்தில் இயக்கப்படும்  அரசுப்பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பூர் பணிமனைக்குட்பட்ட  குறிப்பிட்ட அரசு பேருந்தின் கியர் ராடு பழுதடைந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, பணிமனை ஊழியர்கள் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தியுள்ளார்.

கியர் பாக்ஸ்


கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, இந்த இரும்பு கம்பியைக் கொண்டுதான் திருப்பூருக்கும்  குமுளிக்கும் இடையே ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.  நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அரசு பேருந்து, இரும்பு பைப் உதவியுடன் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Govt Bus

அடுத்த செய்தி