பல்லடம் அருகே அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் முன் சக்கரம் திடீரென பேருந்தில் இருந்து கழன்று சாலையில் அரை மைல் தொலைவு வரை சென்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சேதம் அடைந்தது. .இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பேருந்தின் ஓட்டுனர் காமராஜ் உடனடியாக ஹேண்ட் பிரேக்கை பிடித்து இழுத்து பேருந்தை நடுவழியில் நிறுத்தினார்.
இதனையடுத்து நடத்துனர் சதிஷ்குமார் பயணிகள் அனைவரையும் பத்திரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றி சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் நடுவழியில் சிக்கித் தவித்த பயணிகள் 47 பேரையும் பல்லடம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்று பேருந்து மூலம் ஏற்றி கோவைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த விபத்தில் பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீர் செய்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.