திருப்பூர் அருகே திருமணமான 10வது மாதத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நித்தியா அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 • Share this:
  திருப்பூர் அருகே திருமணமான 10வது மாதத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மார்க்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் திருமான் (45). இவரது மகள் நித்தியா (21) பிஎஸ்சி பட்டைய படிப்பு படித்துள்ளார். மூலனூர் காதல் கோட்டையில் வசிக்கும் ராமலிங்கத்தின் மகன் நவீன் குமார் (29) கொத்தனார் வேலை பார்க்கும் இவர் எட்டாம் வகுப்பு படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, இவர்கள் இருவரும் மூலனூர் காதல் கோட்டை பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்துள்ளனர். நவீன் குமார், வழக்கம்போல் இன்று காலையில் வேலைக்கு சென்று விட்டு உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது, தனது மனைவி  நித்தியா வீட்டின் விட்டத்தில் தூக்கு மாட்டி தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  பின்னர் அக்கம்பக்கத்தினர் நித்யாவை மீட்டெடுத்து மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மேல்சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  இந்தநிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நித்தியா  அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதையடுத்து, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருமான் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் உத்தரவின்படி மூலனூர் ஆய்வாளர் திருவானத்தம், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Esakki Raja
  First published: