ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நள்ளிரவில் பற்றி எரிந்த தீ.. வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையில் பொருட்கள் சேதம்

நள்ளிரவில் பற்றி எரிந்த தீ.. வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையில் பொருட்கள் சேதம்

திருப்பூர் தீ விபத்து

திருப்பூர் தீ விபத்து

மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையில் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையில் தீ விபத்து பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில்  இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் விற்பனை முடிந்து நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனிடையே கடையின் பின் பகுதியில் இருந்து கரும்புகையுடன் தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கடை உரிமையாளருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை என்பதால் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய டயர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

Also Read: மேட்ரிமோனியில் பழகி ஏமாற்றிய காதல் ரோமியோ.. சமாதானம் பேச அழைத்து வெளுத்தெடுத்த சிங்கப்பெண்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக கடையின் பின்புறம் மட்டுமே தீப்பிடித்து எரிந்ததால் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான உதிரிபாக பொருட்கள் தப்பியது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Fire accident, Tiruppur, Two Wheeler