முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதல் திருமணம் செய்த மகள்.. மதுபோதையில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!

காதல் திருமணம் செய்த மகள்.. மதுபோதையில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!

காதல் திருமணம் செய்த மகளின் கழுத்தை மதுபோதையில் அறுத்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!

காதல் திருமணம் செய்த மகளின் கழுத்தை மதுபோதையில் அறுத்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!

காதல் திருமணம் செய்த மகளின் கழுத்தை மதுபோதையில் அறுத்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மடத்துப்பாளையம் சாலை முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பூராஜா (52). பெயின்டராக வேலை செய்துவரும் இவரது சொந்த ஊர் தூத்துக்குடி.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசியில் குடியேறிய இவர் தனது மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியங்கா (19).  அதே போல அவிநாசி சிவசண்முகம் வீதி பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் பாஷா. இவர் தனது மனைவி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.  இவரது மகன் முகமது யாசின் (25) உட்பட அனைவரும் பனியன் கம்பனி வேலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் பூராஜாவின் மகளான பிரியங்கா (19) மற்றும் முகமது யாசின் (25) இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த பூராஜா, பிரியங்காவை கண்டித்து கோவை சிங்காநல்லூரில் உள்ள தனது தங்கை வீட்டில் பாதுகாத்து வந்தார்.

Also read: நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொலை செய்து எரித்த கணவன்: தடயத்தை மறைக்க உதவிய கள்ளக்காதலி..

இதையடுத்து கடந்த 16.07.2021 அன்று வீட்டை விட்டு ஓடிச்சென்று முகமது யாசினை பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் அது காணாமல் போன வழக்காக முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து, பிரியங்கா கடந்த 25 நாட்களாக அவிநாசி சிவசண்முகம் வீதியில் தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் பிரியங்கா தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது மகள் பெற்றோர் பேச்சை மீறி காதல் திருமணம் செய்தததை தாங்க முடியாமல் ஆத்திரத்தில் இருந்த பூராஜா இன்று பிற்பகல் மதுபோதையில் முகமது யாசின் வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த தனது மகள் பிரியங்காவை ஸ்டிக்கர் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காயமடைந்த பிரியங்காவை தகவல் அறிந்து வந்த அவரது மாமியார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் பிரியங்காவின் தந்தையான பூராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணத்தை வெறுப்பதாகவும் தனது மகள் யாரை காதல் திருமணம் செய்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பேன் என்றும் பூராஜா போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.

First published:

Tags: Attempt murder case, Crime News, Tiruppur