திருப்பூரில் தந்தையின் கடனுக்காக, மகனின் வங்கிக் கணக்கை விதிகளுக்கு உட்பட்டே முடக்கியதாக எஸ்.பி.ஐ. வங்கி விளக்கமளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜின் தந்தை ரங்கசாமி எஸ்.பி.ஐ. வங்கியில் 75 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன் வாங்கியிருந்தார். இதற்கு கனகராஜ் ஜாமின் கையெழுத்து போட்டியிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி இறந்துவிடவே, தந்தையின் கடனை தான் கட்டுவதாக வங்கியில் கனகராஜ் கூறியுள்ளார்.
சில மாதங்கள் கடனை கட்டிய நிலையில், கொரோனா காரணமாக தவணைத் தொகையை கட்ட முடியாமல் போனது. இதனால் அதே வங்கியில் கனகராஜ் வைத்திருந்த சேமிப்புக் கணக்கை மேலாளர் சுந்தர மூர்த்தி முடக்கி விட்டார், அந்தக் கணக்கில் மருத்துவ செலவிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் கனகராஜ் வைத்திருந்தார். அவருக்கு உடல்நலம் குன்றிய போதும், அந்த தொகையை விடுவிக்க வங்கி மறுத்ததால், கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
Also Read : பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
விவசாயி கனகராஜின் மரணம் தொடர்பாக விவசாய சங்கத்தினர் வங்கியில் முறையிட்டனர். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதில் விதிமீறல் இல்லை என கூறியுள்ள திருப்பூர் மாவட்ட மேலாளர் அலெக்சாண்டர், கனகராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.