Fake Facebook | திருப்பூர் ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி
Fake Facebook | திருப்பூர் ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு 15 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் புகைப்படத்துடன் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பலருக்கும் நட்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அது ஆட்சியரின் அழைப்பு என நினைத்து ஏற்றுக்கொண்ட திருப்பூர் தனியார் நிறுவன உரிமையாளர் மெசஞ்சரில் உரையாடியுள்ளார். அப்போது, விஜயகார்த்திகேயன் பெயரிலான நபர், தனக்கு 15,000 ரூபாய் பணம் வேண்டும் என்றும், கூகுள் பே மூலம் அனுப்புமாறும் கேட்டுள்ளார். அதைக் கேட்டு சந்தேகமடைந்த தனியார் நிறுவன உரிமையாளர், தான் அருகே உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்திற்கே வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அங்கே காவலர்கள் விட மறுத்த நிலையில், அதுதொடர்பாக மெசஞ்சரில் செய்தி அனுப்பிய நிலையில், எதிர்தரப்பில் இருந்தவர் பணத்தை கூகுள் பேயில் அனுப்புமாறு திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அதனால், அது போலி கணக்கு என்பது உறுதியானது. இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.