முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பருத்தி பஞ்சுக்கான 11% இறக்குமதி வரியை நீக்கிய மத்திய அரசு - ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

பருத்தி பஞ்சுக்கான 11% இறக்குமதி வரியை நீக்கிய மத்திய அரசு - ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

பின்னலாடை தொழில்

பின்னலாடை தொழில்

பின்னலாடை நகரமாக விளங்கும் திருப்பூரில், ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி வர்த்தகம் நடைபெற்று வந்தது. கொரோனா தாக்கம், விண்ணை முட்டும் பஞ்சு விலை உயர்வால் பின்னலாடை தொழில் கடந்த இரு ஆண்டுகளாக சுணக்கம் கண்டது.

  • Last Updated :

பருத்தி பஞ்சுக்கான 11 சதவீத இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால், திருப்பூரில் பின்னலாடை தொழில் மீட்டெடுக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பின்னலாடை நகரமாக விளங்கும் திருப்பூரில், ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி வர்த்தகம் நடைபெற்று வந்தது. கொரோனா தாக்கம், விண்ணை முட்டும் பஞ்சு விலை உயர்வால் பின்னலாடை தொழில் கடந்த இரு ஆண்டுகளாக சுணக்கம் கண்டது.

கடந்த ஆண்டு 360 கிலோ எடை கொண்ட ஒரு கேண்டி பஞ்சு 42,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அண்மையில் 95,000 ரூபாயாக உயர்ந்தது. பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளும் நூல் விலையை ஏற்றியதால் பின்னலாடை துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை, வருகின்ற செப்டம்பர் வரை, ஆறு மாதங்களுக்கு நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பின்னலாடை மற்றும் அதுசார்ந்த தொழில் மீட்டெடுக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்குப் பின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆடைகள் தேவையை பூர்த்தி செய்வதில், சீன சார்பு நிலையை குறைத்து வருகின்றன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் புதிதாக போட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம், அந்நாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் திருப்பூரில் பின்னலாடை தொழில் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், பஞ்சு இறக்குமதி வரி நீக்கத்ததால், தங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று பனியன் நிறுவன உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Also read... ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது - நீதிமன்றம் கவலை

பின்னலாடை தொழிலுடன் தொடர்புடைய எலாஸ்டிக், அட்டைப் பெட்டி, பாலிபேக் விலைகளும் உயர்ந்துள்ளன. இவையெல்லாம் பிற நாட்டினருடன் போட்டியிட்டு ஆர்டர்களை கைப்பற்றும் திறனை குறைப்பதாக பின்னலாடை நிறுவனத்தினர் கூறுகின்றனர். எனவே, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Tiruppur