திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ம
திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் பொய் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை மக்களிடம் எடுத்துக் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாத காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய 2500 கோடிக்கும் அதிகமான நிதி கிடைக்கப்பெறாமல் இருப்பதாகவும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நடைபெறாமல் இருப்பதாகவும் துரை வைகோ குற்றம் சாட்டினார். மாநிலங்களுக்கான நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு எனவும் ஆனால் மாநில சுயாட்சியை மதிக்காமல் பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருவதாகவும் ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்தும் அவர் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு வருவதாகவும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜனநாயக ரீதியில் செயல்படும் எனவும் தெரிவித்தார்.
Must Read : உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு
தொடர்ந்து பேசிய துரை வைகோ, அதிமுக-பாஜக தனித்தனியாக போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என்று மக்கள் தெரிந்து கொண்டுள்ளதாகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இவர்கள் திருந்தியிருக்க வேண்டும் ஆனால் இன்னும் திருந்தவில்லை மக்கள் இவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள் எனவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.