3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டட மேஸ்திரி சிறையில் அடைப்பு
3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டட மேஸ்திரி சிறையில் அடைப்பு
திமுக பிரமுகர்
Child Abuse : பல்லடம் அருகே 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே சின்னகரையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுகவை சேர்ந்த மேஸ்திரி சிவகுமார் 50 என்பவரை பல்லடம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமார் என்பவர் அச்சிறுமியை வீட்டினுள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
வீட்டுக்குச் சென்ற சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.
பல்லடம் மகளிர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திமுக பொறுப்பாளரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : பாலாஜிபாஸ்கர், திருப்பூர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.