திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் உள்ளது.. இந்தத் திருக்கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு மேலாக சக்திவாய்ந்த கோவிலாக விளங்கி வருகிறது, இந்தக் கோயில் முழுவதும் சேதம் அடைந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தன.
இதனால் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர், ஆகவே கிராமத்து மக்களின் வேண்டுகோளும் கிராமத் தலைவர்களின் முன்னிலையிலும் கோவில் சிலைகளை புதிதாக வடிவமைத்து, முழுமையாக புதுப்பித்து வந்த நிலையில் இன்று காலை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பக்தர்கள் அரசு அலுவலர்கள் முன்னிலையில், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயிலின் கலசத்தில் "சற்குரு ஸ்ரீ ல ஸ்ரீ நடராஜ சுவாமிகள் " அவர்களின் தலைமையில் கலசத்தின் மேல் மேல் புனித நீர்விட்டு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Also Read : கிருஷ்ணகிரி அருகே திரெளபதி அம்மன் ஆலய திருவிழா கோலாகலம்
பின்னர் கோவில் கர்ப்ப கலசத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் சுவாமிக்கே 108 வகையான அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது பின்னர் அலங்கரித்து வைத்திருந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் சுவாமியின் தரிசனம் பெற்று அருள் பெற்று சென்றனர்.. பின்னர் கோயில் நிர்வாகம் சார்பாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர், திருப்பூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.