கட்டைப்பையில் பச்சிளம் குழந்தையையை கொண்டு சென்ற பெற்றோர்... குழந்தை உயிரிழந்ததால் யாருக்கும் தெரியாமல் அடக்கம் - பதறவைக்கும் சம்பவம்

தற்கொலை

திருப்பூர் அருகே பெற்றோர்களால் கட்டப்பையில் வைத்து எடுத்து செல்லப்பட்டதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடியேறி தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்பமடைந்து கடந்த 12 ம் தேதி அன்று பல்லடம் அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு உடலில் ரத்தம் குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற பிறகு தனது கணவர் சண்முகத்தை அழைத்த தனலட்சுமி தனது கணவருடன் மருத்துவமனையில் இருந்து துணிகள் நிரம்பிய கட்டை பையுடன் கிளம்பி பைக் மூலம் பல்லடம் வந்து சேர்ந்துள்ளனர்.

Also Read : வீட்டில் தனியாக இருந்த முதியவரை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய 3 இளம்பெண்கள் போலீசில் சிக்கினர்

இதன் பின்னர் தனலட்சுமி மருத்துவமனையில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக பல்லடம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மூலமாக இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்த போது தனக்கு அங்கு பிடிக்காததால் வெளியே வந்து விட்டதாக தனலட்சுமி தெரிவித்துள்ளார். பின்னர் குழந்தை குறித்து கேட்ட போது தான் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியது.

மருத்துவ மனையில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என எண்ணி கட்டைப்பையில் குழந்தையை வைத்து துணிகளுக்கு இடையே மறைத்து எடுத்து வந்ததாகவும் வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தை இறந்து போனது தெரியவந்ததாகவும் தங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் கணவர் சண்முகம் காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்து போன செவிலியர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தனலட்சுமியையும் சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

Also Read : ’ஆபாச பேச்சு’ பப்ஜி மதன் சரணடையப்போவதாக தகவல்

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கட்டை பையில் துணிகளுக்கு இடையே மறைத்து எப்படி எடுத்துச் சென்றனர். மருத்துவ மனையில் இருந்து தப்பி செல்ல காரணம் என்ன. உடனடியாக யாருக்கும் தெரியாமல் குழந்தை சடலத்தை புதைத்தது என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: