• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்பூரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆபத்தான தொழிற்சாலை - ஆபத்தை தடுக்க அரசுக்கு கோரிக்கை!

திருப்பூரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆபத்தான தொழிற்சாலை - ஆபத்தை தடுக்க அரசுக்கு கோரிக்கை!

ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலை

ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலை

அதிக அளவில் புகையினை வெளியேற்றுவதால் இரவு நேரங்களில் காற்று அதிக அளவில் மாசடைந்து சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

  • Share this:
பல்லடம் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலையை மூட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டி பஞ்சாயத்தில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஊருக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கண்ணப்பன் அலாய் என்ற இரும்பு உருக்கு தொழிற்சாலை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசடைவதால் குழந்தைகள், வயதான முதியவர்களுக்கு சுவாச கோளாறு,தோல் நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கரும்புகை துகள்களின் படிமானங்கள் விளைநிலங்களில் படிவதால் எவ்வித பயிர் சாகுபடியும் செய்யமுடியாமல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி பகல் நேரங்களில் குறைந்த அளவில் புகையினை வெளியேற்றும் தொழிற்சாலை இரவு நேரங்களில் அதிக அளவில் புகையினை வெளியேற்றுவதால் இரவு நேரங்களில் காற்று அதிக அளவில் மாசடைந்து சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Also Read:  நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் போலி ஐ.டி.ரெய்டு.. 5 பேர் கைது..

மேலும் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையினால் 50க்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் இப்பகுதியினர் கூறுகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: