Home /News /tamil-nadu /

அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, காட்டிக்கொடுக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் - கே.பாலகிருஷ்ணன்

அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, காட்டிக்கொடுக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் - கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

Annamalai : அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்றும் விடுதலை போராட்டத்தில் பங்கெடுக்காவிட்டாலும் காட்டிக்கொடுக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற இருக்கும் தேர்தல் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான தேர்தல், அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தாமல் இருந்ததன் விளைவு மக்களுக்கான அதிகார பரவல் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டது என கூறினார்.

பெண்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோரெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக வர உள்ளார்கள் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியில் அறபோர் இயக்கம் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக ஆதாரத்தோடு வழக்கு போட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள், கட்டுமானம், தெருவிளக்கு போன்ற எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளாதகவும் குற்றம்சாட்டினார்.

நகர்புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை,  மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் பெரும்பாலான தொழில்கள் நலிவடைந்துள்ளன என்று கூறிய கே.பாலகிருஷ்ணன், ஊழலற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் செயல்படுவார்கள் என் உறுதி அளித்தார்.

Must Read : உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு

அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய பாலகிருஷ்ணன், அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி,  நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அவ்வாறு பேச மாட்டார்கள் என்றும், விடுதலை போராட்டத்தில் பங்குகொள்ளாமல் காட்டிக்கொடுக்கும் கூட்டத்தை  சேர்ந்தவர் அண்ணாமலை என்றும் விமர்சித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Annamalai, CPM balakrishanan, Local Body Election 2022

அடுத்த செய்தி