• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்

திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று விமர்சித்த ஜே.பி.நட்டா, பாஜகவிற்கு பணியாற்றினால் கட்சிக்கும், உங்கள் இனத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பணியாற்றியவர்கள் ஆவீர்கள் என்று குறிப்பிட்டார்.

  • Share this:
    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று விமர்சித்தார். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவது தான் பாஜகவின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு‌ மாவட்ட கட்சி அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திருப்பூரில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.  இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, பழமை வாய்ந்த தமிழ் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டான இங்கு இருப்பதில் மகிழ்ச்சி. திருவள்ளூவர் வாழ்ந்த பூமியை வணங்குகிறேன்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வார்த்தைகளை கொண்ட கலாச்சாரத்தின் அடையாளமான தமிழகத்திற்கு வந்துள்ளேன்.

    சில கட்சிகள், தலைவர் இல்லங்களில் நடைபெறும். தலைவர்கள் போனால் கட்சி காணாமல் போய் விடும். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். குறிக்கோளும் கட்சியும் நிலைத்திருக்கும். அதன் அடிப்படையில் 720 கட்சி அலுவலகங்கள் திறக்க முடிவு செய்து 473 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 4 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 12 அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும். இது அலுவலகம் அல்ல பணிமனை என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்


    திமுக குறித்து பேசிய ஜே.பி.நட்டா, திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இது ஒரு குடும்ப ஆட்சி. தி.மு.க.வில் குடும்பத்தைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் வழிநடத்தலாம். பா.ஜ.க.வில் மட்டுமே எளிமையான பின்னணியில் இருப்பவர்கள் முன்னேறவும்  தலைவர்களாகவும் ஆக முடியும்

    சமுதாயத்தின் இறுதி விளிம்பில் இருப்பவர்களுக்கு பாஜக பாடுபடுகிறது. வங்கி கணக்குகள், உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா என பல திட்டங்களில் பொதுமக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

    நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த வாரிசு அரசியல் தான் இங்கே நடக்கிறது. வாரிசு ஆட்சி  ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு சவாலாக உள்ளது. அந்த அமைப்பில், மக்கள் குடும்பத்திற்கு சேவை செய்கிறார்கள், மாநிலத்திற்கு அல்ல, தேசத்திற்கு அல்ல. பாஜகவில் நீங்கள் மக்கள், மாநிலம் மற்றும் தேசத்திற்கு சேவை செய்கிறீர்கள்.

    மேலும் படிங்க: பா.ஜ.கவில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: