டாஸ்மாக் கடையில் மதுபானம் கடனாக கேட்டு ஆளுங்கட்சி நாங்க என காங்கிரஸ் பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் உள்ள 3990 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் ஜெகன் என்பவர் நேற்று மாலை மதுபானம் வாங்க சென்றுள்ளார்.
அங்கு, டாஸ்மாக் ஊழியரிடம் சிறிது நேரத்தில் பணம் எடுத்து வந்து தருவதாக கூறி கடனாக மதுபானம் தரும்படி ஜெகன் கேட்டுள்ளார். ஆனால், டாஸ்மாக் ஊழியர் பணம் தராமல் மதுபாட்டில் தர முடியாது என கூறியுள்ளார்.
Also read: பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!
டாஸ்மாக் ஊழியர் மதுபாட்டிலை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெகன், தான் ஆளுங்கூட்டணியை சேர்ந்தவன் என்றும் குரலை உயர்த்த தொடங்கியுள்ளார்.
எனினும், டாஸ்மாக் ஊழியர் அதனை பொருட்படுத்தாமல் அவரது பணியை பார்த்தப்படி இருந்துள்ளர். தொடர்ந்து, தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும், தனக்கே மதுபாட்டில் தரமாட்டியா நீ என அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இந்த சம்பவத்தை அங்கு மதுஅருந்த வந்த குடிமகன்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்குமா கட்சி பெயரை பயன்படுத்துவார்கள் என நொந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.