• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நண்பன் பிறந்தநாளை கொண்டாட வந்த கல்லூரி மாணவன்.. ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம்

நண்பன் பிறந்தநாளை கொண்டாட வந்த கல்லூரி மாணவன்.. ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம்

ஆதி

ஆதி

கல்லூரி மாணவன் அமராவதி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Share this:
நண்பனின் பிறந்த நாளை கொண்டாட திருப்பூரில் இருந்து தாராபுரம் வந்த கல்லூரி மாணவன் அமராவதி ஆற்றில் மூழ்கி பரிதாப உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழி சாலை அமராவதி ஆற்றில் நேற்று மாலை நண்பனின் பிறந்த நாளை  கொண்டாட வந்திருந்த கோவை சூலூர் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் அமராவதி ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.  திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்பவர் முத்துச்சாமி இவரது மகன் ஆதி (எ) ஆதித்யா ராம் (17). இவர் சூலூர்  தனியார் பாலிடெக்னிக்கில்  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பன் சூர்யாவின் பிறந்த நாள் நேற்று என்பதால் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயத்தில் உள்ள  சூர்யாவை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் நண்பன் செல்வகுமாருடன்  குளித்துள்ளார். அப்போது ஆதி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி ஆதியின்  உடலை மீட்டனர். பின்னர் ஆதியின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவன் குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: