Home /News /tamil-nadu /

திருப்பூரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிவந்த அண்ணன் தம்பி- ஆம்னி வேனுடன் சிக்கினர்

திருப்பூரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிவந்த அண்ணன் தம்பி- ஆம்னி வேனுடன் சிக்கினர்

திருப்பூர் திருட்டு சம்பவம்

திருப்பூர் திருட்டு சம்பவம்

திருட்டு சகோதரர்கள் மீது  பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

திருப்பூர் பகுதியில் பல நாட்கள் திருடி வாழ்ந்த அண்ணன் தம்பி, திருட்டு வண்டியுடன் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவரது மனைவி பிரியா. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பிரபு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். சென்னையில் இருந்து கடந்த  4 ஆம் தேதி  வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு  லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, தங்கச் சங்கிலி, மோதிரம், உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Also Read: பல்லாவரம் அருகே போலீசாரிடம் தப்ப முயன்ற ரவுடிகள் தவறி விழுந்து கை கால் முறிவு

இதுகுறித்து பிரபு காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார்  கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு   விசாரணை நடத்தி வந்தனர் . இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள முத்தாண்டிபாளையம் பிரிவு என்ற இடத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்னி வேனில் வந்த 2 வாலிபர்களை   விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

Also Read: டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு : டாஸ்மாக்கை குறிவைக்கும் புரோக்கர்கள்... அதிர்ச்சி தகவல்

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த  தமிழ்ச்செல்வன், 32, அவரது தம்பி மாதவன்,29, என்பதும் இருவரும் சேர்ந்து பருவாய் பிரபு வீட்டில் 5 .1/2பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12. 1/2 பவுன் நகையையும் கொள்ளையடித்ததும் அவர்கள் ஓட்டி வந்த ஆம்னி வேன் வெள்ளகோயில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 18 பவுன் தங்க நகைகள், ஆம்னி வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். மேலும் அண்ணன் தம்பி  இருவர் மீதும்  பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Crime News, Police, Theft, Tirupur

அடுத்த செய்தி