பனியன் தொழிலை பாதுகாக்க நூல், பருத்தி, மின்சாரத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்க கோரி
பாஜக சார்பில்
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பனியன் தொழில் உள்ளது. இத்துறையின் மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் போட்டி நாடுகளுடன் ஆடை வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாநில அரசு வரியை மட்டும் பெற்றுக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூல் விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குற்றம் சுமத்தி வருவதாகவும், தமிழக அரசு வரியை பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், நூல் விலையில் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்றார்.
Must Read : கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்... கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?
மேலும், பருத்தி விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும், மின்சார கட்டணத்தில் 30 சதவீத மானியம் வழங்க வேண்டும், தமிழக அரசே பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு அடக்க விலைக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதா தெரிவித்தார்.
செய்தியாளர் - பாலாஜி பாஸ்கர், திருப்பூர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.