Home /News /tamil-nadu /

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

Tiruppur | BJP | கொரோனா பேரிடர் காலத்தில் இவர்களின் பணி அர்ப்பணிப்பு எங்கள் வார்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

திருப்பூர் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அந்த பகுதியில் தூய்மைய பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து வாக்கு சேகரித்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க. சார்பில்  46-வது வார்டு வேட்பாளராக வி.ஜி. வி. விஜயகுமார் போட்டியிடுகிறார்.  தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் 46-வார்டில் பல ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்த துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து கால்களை கால்களைக் கழுவி  பாதபூஜை செய்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

Also Read : கோவையின் முதல் பெண் மேயர் யார்.. கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் போட்டி

இதுகுறித்து அவர் கூறியதாவது எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக அன்றாடம் காலை மாலை என நேரங்காலம் பார்க்காமல் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணி செய்து வருகின்றனர்.   மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இவர்களின் பணி அர்ப்பணிப்பு எங்கள் வார்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனவே அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை செலுத்தி தாமரை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன் என்றார்.

Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து இங்கே க்ளிக் செய்யவும்.
Published by:Vijay R
First published:

Tags: BJP, Local Body Election 2022, Tiruppur

அடுத்த செய்தி