திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியை மதம் மாற்ற முயன்றதாகவும், ஏசுநாதரை வணங்க வேண்டும் என ஆசிரியை மிரட்டியதாகவும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் பள்ளியில் வைத்து மாணவி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடம் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டார்.
இந்தத விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் ஆசிரியை மதமாற்ற செய்ய முயன்றதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் மத மாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் வினீத் கூறியுள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read :
வகுப்பறையில் மாணவிகள் மடி மீது தலைவைத்து செல்போன் விளையாட்டு - அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில் மாணவியின் தந்தை நியூஸ் 18 தமிழ் நாடு தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில், விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், இறுதி வரை தங்களிடம் சமரசம் பேசவே முயன்றதாகவும் தற்போது தங்கள் புகாரில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே நீதிமன்றத்தை நாட உள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்தார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.