வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே வெற்றி பெற்றதாக பேனர் - அதிமுக வேட்பாளர் விளக்கம்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே வெற்றி பெற்றதாக பேனர் - அதிமுக வேட்பாளர் விளக்கம்
திருப்பூர்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பேனர் வைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தமுறை தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.எஸ்.ராமலிங்கம் 14,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்களர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்து பேனர் வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஷமிகள் சிலர் தனது செல்போன் எண்ணுடன் பேனர் வைத்துள்ளனர். இதனை கண்டதும் உடனடியாக அகற்றி விட்டோம்.
ஆனால் இந்த பேனரை புகைப்படம் எடுத்து வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறாத நிலையில் வேண்டுமென்றே தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் இந்த பேனருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் மறுப்பு தெரிவித்தார்.
திருப்பூர் செய்தியாளர் : பாலாஜி
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.