Home /News /tamil-nadu /

ஹோட்டல்களில் ஜெய் பீம் படம் வெளியிட சூர்யா ரசிகர்கள் முயற்சி - திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி

ஹோட்டல்களில் ஜெய் பீம் படம் வெளியிட சூர்யா ரசிகர்கள் முயற்சி - திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி

ஜெய் பீம் - சூர்யா

ஜெய் பீம் - சூர்யா

ஓ.டி.டி படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி இல்லாத நிலையில் இது போன்ற செயல்கள் திரையரங்குகளை கடுமையாக பாதிக்கும்

திருப்பூரில் தாபா ஓட்டல்களில் ஜெய்பீம் திரைப்படத்தை திரையிட சூர்யா ரசிகர்கள் முயற்சிக்கு  திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் நேற்று வெளியானது. இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் பொது வெளியில் வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் திருப்பூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில்,  நள்ளிரவு  மற்றும் அதிகாலையில் படத்தை வெளியிட முயற்சி செய்து வருவதாகவும் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், “ தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி உரிமம் பெற்ற திரையரங்கு தவிர்த்து பிற இடங்களில் ஒளிபரப்ப கூடாது என்ற விதி உள்ளது இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்  'ஜெய்பீம்' படத்தை, பொது வெளியில், தாபா ஓட்டல்களில் திரையிட முயற்சித்துள்ளனர் இது கண்டிக்கத்தக்கது.

மேலும் நீட், வேளாண் சட்டங்கள் குறித்து குரல் கொடுக்கும் சூர்யா தனது ரசிகர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பதாகவும், ஓ.டி.டி படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி இல்லாத நிலையில் இது போன்ற செயல்கள் திரையரங்குகளை கடுமையாக பாதிக்கும் எனக் கூறுகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனுவும் அனுப்பி வைத்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Fans, Jai Bhim, OTT Release, Surya, Theatre

அடுத்த செய்தி