• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்பூரில் 44 வயது நபருக்கு பன்றிக்காய்ச்சல் : வீடு தனிமைபடுத்தப்பட்டது

திருப்பூரில் 44 வயது நபருக்கு பன்றிக்காய்ச்சல் : வீடு தனிமைபடுத்தப்பட்டது

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல்

திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நபரின் வீடு தனிமைபடுத்தப்பட்டது.

  • Share this:
    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட (15.வேலம்பாளையம்) பகுதியை சேர்ந்த 44 வயது நபருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அவரது வீடு தனிமைபடுத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால், உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல, வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், கோவையில் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகறிது.

    Must Read : கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    பன்றி காய்ச்சலால் தற்போதைக்கு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: