உடுமலைப்பேட்டையில் யானைகளை விரட்டி, விரட்டி தாக்கிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு.. (வீடியோ)

Youtube Video

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே திருமூர்த்தி ஆறு வனப்பகுதியில் இளைஞர்கள் சிலர் யானைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. யானைகளை சித்ரவதை செய்த பழங்குடியின இளைஞர்கள் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 • Share this:
  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி ஆறு வனப்பகுதியில் யானைகளை விரட்டுவது செல்போனில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இதில் இருக்கிறார்கள். காட்டு யானைகளை பின்தொடர்ந்து துன்புறுத்தி ஆத்திரமூட்டுகிறார்கள். யானை பிளிறியபடி விரட்டும்போது பெரிய பெரிய கற்களால் தாக்குகின்றனர்.

  யானைகளிடம் பிடிபடுவோம் என அச்சப்படுவோர் மரங்கள் மீது ஏறி அமர்ந்து கொண்டு, மற்றவர்கள் யானைகளை  துன்புறுத்துவதை மேலே இருந்து பார்த்து ரசித்து படம் பிடித்துள்ளனர். சுற்றி வளைத்து துன்புறுத்துவதால் ஆத்திரப்படும் யானைகள் சுற்றிச் சுற்றி வந்து ஆத்திரத்தில் பிளிறின.  தங்களை பாதுகாத்துக் கொள்ள இவர்கள் யானைகளை விரட்ட வில்லை என்பது இந்த காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. மலைகளில் வசிப்பவர்களே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது தொடர்பாக பழங்குடியின இளைஞர்கள் 3 பேர் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... ஒரே நாளில் கணவன், மனைவி உயிரிழப்பு... இறப்பிலும் இணை பிரியாத தம்பதி...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: