மதியம் ஒரு கட்டிங், இரவு குவாட்டர்...! வித்தியாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு

மதியம் ஒரு கட்டிங், இரவு குவாட்டர்...! வித்தியாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • News18
  • Last Updated: January 26, 2020, 8:59 AM IST
  • Share this:
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் குவாட்டர் மற்றும் டீ காசுகள் வழங்கப்படும் என உரிமையாளர் ஒருவர் சுவரொட்டி விளம்பரம் செய்துள்ளார்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தங்களது நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் எடுக்க நிறுவன உரிமையாளர் ஒருவர், பணிக்கு சேரும் வேலை ஆட்களுக்கு இரவு குவாட்டர் பாட்டிலுடன் டீ காசு வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.


பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார் உரிமையாளர். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்