Home /News /tamil-nadu /

முக்கியமான விதிமுறையை மறந்த பவர்கிரிட் நிறுவனம்... அனுமதியை ரத்து செய்து திருப்பூர் ஆட்சியர் அதிரடி...!

முக்கியமான விதிமுறையை மறந்த பவர்கிரிட் நிறுவனம்... அனுமதியை ரத்து செய்து திருப்பூர் ஆட்சியர் அதிரடி...!

கூட்டமாக அழைத்து வரப்பட்ட பணியாளர்கள்

கூட்டமாக அழைத்து வரப்பட்ட பணியாளர்கள்

”பவர் கிரிட் நிறுவனத்தினர் வடமாநில தொழிலாளர்களை லாரி, டிராக்டரில் ஒட்டு மொத்தமாக அழைத்து வந்தனர்”

  • News18
  • Last Updated :
திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் உயரழுத்த மின் தொடரமைப்பு பாதை கட்டுமானம் தொடர்பாக தாராபுரம் பல்லடம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன.

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த திட்டப் பணிகளை தொடர, சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அனுமதி அளித்திருந்தார்.

பணியை துவக்கிய பவர் கிரிட் நிறுவனத்தினர் வடமாநில தொழிலாளர்களை லாரி, டிராக்டரில் ஒட்டு மொத்தமாக அழைத்து வந்தனர். மேலும் சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, சமூக இடைவெளியை பின்பற்றாமல் பணியாற்றிய பவர் கிரிட் நிறுவனத்திற்கு கொடுத்த பணி அனுமதியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ரத்து செய்து உத்தரவிட்டார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Lockdown, Tiruppur

அடுத்த செய்தி