உதவிய வாட்ஸ்அப் - காலையில் கடத்தப்பட்ட குழந்தை மாலையில் மீட்பு

திருப்பூரில் சமூக வலைதளங்கள் உதவியால் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் விரைந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது

உதவிய வாட்ஸ்அப் - காலையில் கடத்தப்பட்ட குழந்தை மாலையில் மீட்பு
மீட்கப்பட்ட சிறுவன்
  • News18
  • Last Updated: July 28, 2020, 6:38 AM IST
  • Share this:
திருப்பூரைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் 4 வயது மகன் ஜாவித் அகமது நேற்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென காணமல் போய் உள்ளார்‌. மகனை காணவில்லை என காஜா மைதீன் அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியுள்ளார். எனினும் மகனைக் கண்டறிய முடியாத நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

தொடர்ந்து தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் தனது மகனின் படத்தை பகிர்ந்து, தனது மகனை காணவில்லை எனவும் தனது மகனை கண்டால் உடனடியாக தனக்கு தொடர்பு கொள்ள வேண்டி  தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்தார்.  இந்த செய்தி திருப்பூர் முழுவதும் வேகமாக பரவியது.

குழந்தையை காணவில்லை என ஒவ்வொருவரும் வேகமாக பகிர்ந்ததுடன் குழந்தையை தேடவும் முயன்றனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் குழந்தையை எங்கும் கொண்டு செல்ல முடியாமல் அச்சமடைந்து மாலை நேரத்தில் குழந்தையை திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே  இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம்  ஒப்படைத்தனர். காலையில் காணாமல் போன குழந்தை வாட்ஸ்அப் பகிர்வின் மூலமாக மாலையே கண்டறியப்பட்ட சம்பவம் திருப்பூரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க: இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்

படிக்க: மீண்டும் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசா


படிக்க: முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்

மேலும் குழந்தையை கடத்திய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading