20 பரோட்டா சாப்பிட்டால் ₹1000 பரிசு... இல்லையென்றால்..?

Youtube Video

இதுவரை ஓர் இளம் பெண் மட்டுமே அதிகபட்சமாக 12 பரோட்டா சாப்பிட்டுள்ளார்.

 • Share this:
  திருப்பூரில் ஆயிரம் ரூபாய் பரிசு என்ற அறிவிப்பால் பரோட்டோ சேலஞ்ச் பிரபலமாக வருகிறது. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகர் சூரி பங்கேற்கும் பரோட்டா போட்டி போன்று, திருப்பூரில் வாடிக்கையாளர்களை கவர இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது.

  பெருமாநல்லூரில் உள்ள  உணவகத்தில் 20 பரோட்டா சாப்பிட்டால் ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், சாப்பிட்ட பரோட்டாவுக்கு மட்டும் பணத்தை கொடுக்க வேண்டும்.

  ஆனால், இதுவரை ஓர் இளம் பெண் மட்டுமே அதிகபட்சமாக 12 பரோட்டா சாப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி முதல், பரிசுத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உணவக உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: