முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை - திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை - திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூரில் ஊரடங்கை மீறி நள்ளிரவில் நூற்றுக்கணக்கானோர் சாலையில் தொழுகையில் ஈடுபடுவதாக புகைப்படத்துடன், ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், அந்த புகைப்படம் 2018ம் ஆண்டு அலகாபாத் பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், இது போன்று தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொய்யான தகவலை பதிவிட்ட அந்த நபர், காவல்துறை மற்றும் மக்களிடம் மன்னிப்பு கோரி மீண்டும் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Fake News, Lockdown