முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காவலரின் ’அத்துமீறல்’ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது - திருப்பத்தை கொடுத்த திருப்பத்தூர் எஸ்.பி

காவலரின் ’அத்துமீறல்’ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது - திருப்பத்தை கொடுத்த திருப்பத்தூர் எஸ்.பி

News 18

News 18

திருப்பத்தூரில் கடை ஒன்றில் காவலர் எடை மெஷினை தூக்கி எறிந்து உடைத்த நிலையில், மாவட்ட எஸ்.பி புது மெஷின் வாங்கிக்கொடுத்து மன்னிப்பும் கோரியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவர்களை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூரில் காவலர் ஒருவரால் கடையில் இருந்த எடை மெஷின் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட எஸ்.பி விஜயகுமார், இன்று அந்த கடைக்குச் சென்று, புதிய எடை மெஷினை வழங்கியதுடன். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.


படிக்கபெற்ற மகளை கொன்று புதைத்து நாடகம் ஆடிய தாய் - 6 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை

படிக்கவிரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றித் தெரியுமா..?


திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் ராஜா. வழக்கம்போல கடையை அவர் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரகுராமன் என்பவர், ராஜா கடையை திறந்து வைத்திருந்ததற்கு ஆவேசமாக பேசியதுடன் அங்கிருந்த எடை மெஷினையும் தூக்கி போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய எந்திரத்தை வழங்கும் எஸ்.பி

இது தொடர்பாக எஸ்.பி விஜய குமார் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”ஒரு தவறான செயலை சரிசெய்யும் முயற்சியாக, காவலரால் உடைக்கப்பட்ட வியாபாரியின் எடைமெஷினுக்கு, புதிய மெஷின் வழங்கப்பட்டதுடன் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அந்த காவலர் பணியிட மாற்றப்பட்டதுடன் அவருக்கு மன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

காவலரின் அத்துமீறல் கவனத்தில் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தால் போலீசார் மீது பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பார்வையானது, திருப்பத்தூர் எஸ்.பி.யின் செயலால், “எல்லா போலீசாரும் ஒரே மாதிரி இல்லை” என்ற மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Sathankulam, Tirupattur, TN Police