அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு மன்னிப்புக் கேட்ட திமுக நிர்வாகி

அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு மன்னிப்புக் கேட்ட திமுக நிர்வாகி

பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை மீது பட்டாசு பொறி விழுந்து தீ பற்றி எரிந்தது.

 • Share this:
  திருப்பத்தூர் அருகே எம்ஜிஆர் சிலை பற்றி எரிந்த சம்பவத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு திமுக நிர்வாகி மன்னிப்புக் கேட்டார்.

  திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று காலை சுமார் 10 மணி அளவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து  கொண்டாடி உள்ளனர்

  அப்போது  பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை மீது பட்டாசு பொறி விழுந்து தீ பற்றி எரிந்தது. இதனை கண்டித்து அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் காலை 11 மணி அளவில் சாலை மறியல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் சம்பவம் குறித்து கந்திலி ஒன்றிய திமுக பொருளாளர் நாகராஜன் என்பவர் எம்ஜிஆரின்  திருவுருவச் சிலையின் காலைதொட்டு  வணங்கி பகிரங்கமாக மன்னிப்புக் மன்னிப்பு கேட்டார். அதனைத்தொடர்ந்து அதிமுக திமுகவினர் இடையே நடந்த பிரச்சனை தீர்வுக்கு வந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.
  Published by:Vijay R
  First published: