காதலியின் திருமணத்தை நிறுத்த ஆசிட் வீசிய இளைஞர் - ஆம்பூரில் நடந்த பயங்கரம்

ஆசிட் வீசிய இளைஞர்

காதலித்த பெண்ணின் திருமணத்தை நிறுத்த இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
    காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருந்த வாலிபர் மீது ஆசிட் ஊற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத். இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  கடந்த மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்கு சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது.

    Also Read: செவ்வாய்கிழமை ரூ300... சிறப்புபூஜைக்கு 1000.. - மது அருந்த வைத்து குறி சொல்லும் விசித்திர சாமியார்

    அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர்  ஷமீல் அஹமத் மீது ஆசிட்டை வீசி விட்டு சென்றுள்ளார். முகம் மற்றும்  தோள்பட்டை பகுதியில் ஆசிட் விழுந்து படுகாயமடைந்த ஷமீல் அஹமதுவை அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    Also Read:  2000 வாங்கிட்டு என்கிட்டயே.. நோ பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஏகவசனம் பேசிய விஏஓ - வைரலாகும் வீடியோ

    ஷமீல் அஹமதுவுக்கு 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் ஷமீல் அஹமத்  உடன் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று திருமண நடைபெற்று முடிந்தது.மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போது  பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அஹமது  இவ்வழக்கில் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர்.

    விசாரணையில், “ என்னுடைய உறவினர் பெண்ணை நான் காதலித்து வந்தேன். பெரியோர்களால் ஷமீல் அஹமதுவுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துவிட்டனர். இதனால் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக நான் ஷமீல் அஹமத் மீது பேர்ணம்பட்டு  ஒர்க் ஷாப்பில் இருந்து கேன் மூலம் ஆசிட்  வாங்கினேன். இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் அவரை  பின்தொடர்ந்தேன். பின்னர் கடந்த 17ஆம் தேதி அவர் மீது வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்டேன் என்று காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்பேரில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆம்பூர் அருகே காதலித்த பெண் வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய இருந்த நிலையில் திருமணத்தை நிறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: வெங்கடேசன் ( திருப்பத்தூர்)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: