ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நான் உதயநிதியின் பி.ஏ.. என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சங்களை சுருட்டிய மோசடி பேர்வழி கைது

நான் உதயநிதியின் பி.ஏ.. என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சங்களை சுருட்டிய மோசடி பேர்வழி கைது

மோசடி நபர் கைது

மோசடி நபர் கைது

உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் எனக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களை சுருட்டிய சென்னை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  அரசு வேலை வாங்கித்தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி லட்சங்களை சுருட்டிய மோசடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

  திருப்பத்தூர் மாவட்டம் செல்வாத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரது மகள் தேன்மொழி. பட்டதாரியான இவர் 2017-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார். தேன்மொழிக்கு திருமணப் பேச்சு முடிவானதும் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தற்போது திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். சென்னையில் இருந்த போது தேன்மொழிக்கு ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

  இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேன்மொழியை செல்போனில் தொடர்புக்கொண்ட ராஜேஷ் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். தற்போது தான் திமுக இளைஞரணியில் இருப்பதாகவும் தலைமைச் செயலகத்தில் ஒரு பணியிடம் காலியாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. உன்னை அந்த வேலையில் சேர்த்து விடுகிறேன். என்ன கொஞ்சம் பணம்தான் செல்வாகும் எனக் கூறியுள்ளார்.

  Also Read:  காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை.. பொள்ளாச்சி நடந்த அதிர்ச்சி சம்பவம்

  ராஜேஷின் பேச்சை நம்பிய தேன்மொழி அக்கம்பக்கத்தில் வட்டிக்கு கடன் வாங்கியும் தன்னிடம் இருந்த சேமிப்பு எல்லாவற்றையும் சேர்ந்து சுமார் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். வருடங்கள் ஓடியும் வேலைக்கான ஆர்டர் வந்தபாடில்லை. இதனையடுத்து ராஜேஷை தொடர்புக்கொண்ட அந்த பெண் வேலை வாங்கி கொடுங்கள் உங்களால் முடியவில்லை என்றால் என்னிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பி கொடுங்கள் எனக் கேட்டுள்ளார்.

  அதற்கு ராஜேஷ், “ திமுக ஆட்சி வந்துவிட்டது. கொஞ்சம் நாள் வெயிட் பண்ணு. நிச்சயமா வேலை வாங்கித்தரேன். இப்பக்கூட  உதயநிதி அண்ணாகிட்ட தான் வேலை விஷயமா பேசிக்கிட்டு இருந்தேன் எனக் கதை அளந்து விட்டிருக்கிறார். அந்த அப்பாவி பெண்ணோ மீண்டும் அவரது பேச்சை நம்பியுள்ளார்.

  அதோடு நில்லாமல் இன்னும் ஒன்று இரண்டு காலிப்பணியிடம் இருக்கிறது. அதையும் நிரப்பனும் உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லு எல்லாருக்கும் ஒண்ணா வேலைக்கான ஆர்டர் வாங்கித் தர்றேன் என மிண்டும் கதை அளந்துவிட்டிருக்கார். அந்த நபரின் பேச்சை நம்பி தனக்கு தெரிந்த சில நபர்களிடம் ராஜேஷை அறிமுகம் செய்து வைக்க. அவர்களிடமும் கதை அளந்து லட்சங்களை சுருட்டியுள்ளார்.

  Also Read: மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்

  நாள்கள் செல்லச் செல்ல பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியிடம் வேலைக் குறித்து கேட்டுள்ளனர். வேலைக் கிடைக்காததால் தேன்மொழியின் வீட்டுக்கு சென்று நச்சரித்துள்ளனர். மீண்டும் ராஜேஷை தொடர்புக்கொண்ட தேன்மொழி பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். ராஜேஷ் மிரட்டல் தோணியில் பேசியுள்ளார். நான் உதயநிதியின் பி.ஏ.இப்ப நடக்கிறது எங்க ஆட்சி. உன்னால் என்ன ஒன்னும் பண்ண முடியாது எனக் கூறியுள்ளார். பணத்தை கொடுத்து ஏமாந்தது மட்டுமல்லாமல் பலரிடமும் பணம் வாங்கி கொடுத்ததை நினைத்து கடுமையான மன உளைச்சலுக்கு தேன்மொழி ஆளாகியுள்ளார். இதன்காரணமாக தற்கொலை முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

  இதனையடுத்து உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணுக்கு தைரியம் கொடுத்து மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்துக்கு சென்று அந்தப்பெண் இதுகுறித்து புகார் அளித்தார். இளம்பெண் கொடுத்த புகார் மனு கந்திலி காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  புகார் குறித்து தேன்மொழியை நேரில் அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தேன்மொழியிடம் ராஜேஷின் செல்போன் எண்ணை பெற்று விசாரணைக்கு வருமாறு போலீஸார் கூறியுள்ளார். அப்போது நான் உதயநிதியின் பி.ஏ. யாராக இருந்தாலும் தலைமைச் செயலகம் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என திமிராக பேசியுள்ளார்.

  Also Read: பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவு ரத்து...

  இதற்கிடையில் தேன்மொழிக்கு மீண்டும் போன் செய்து மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. உன்னால என்ன ஒண்ணும் பண்ண முடியாது. என் கட்சி செல்வாக்கு வெச்சு இந்த மேட்டர நான் பார்த்துக்கிறேன். யாருக்கும் ஒரு ரூபாய் கொடுக்க முடியாது. உனக்கு தான் ஆபத்து நீ எங்கயாவது போய் மறைஞ்சுக்கோ எனக் கூறியுள்ளார்.

  இந்த விவகாரம் தொடர்பாக தேன்மொழி புகார் அளித்தார். இதனையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை உதயநிதியின் பி.ஏ-வும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பண மோசடி செய்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியை சேர்ந்தவர் எனக் கூறியது தெரியவந்துள்ளது.மோசடி, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Cheating, Cheating case, Crime News, Money, Udhayanidhi Stalin