• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

  • Share this:
    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஆனந்தன் (30) என்பவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டம் தேர்தலுக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது வாக்கினை செலுத்தியுள்ளார் பின்பு வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்பொழுது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்து எங்களுக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை பணத்தை என்ன செய்கிறாய் என அவருடைய பெற்றோர்கள் கேட்டுள்ளனர்.

    அப்பொழுது பெற்றோரிடமும் மற்றும் அவருடைய உறவினர் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்துள்ளதை பெற்றோர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி கிராமிய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடிய இளைஞர் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: