ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடிக்கடி பழுதாகி நின்றதால் ஓலா பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்.. ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

அடிக்கடி பழுதாகி நின்றதால் ஓலா பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்.. ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

ஓலா பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்

ஓலா பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்

ஆம்பூர் அருகே பழுதாகி நின்ற மின்சார பைக்கை ஆத்திரத்தில் அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்  பிசியோ தெரபி மருத்துவராக பணிபுரிபவர்  பிரித்திவிராஜ்..இவர் ஜனவரி மாதம்  ஆன்லைன் மூலம் எலக்ட்ரிகில் ஓடும் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ,ந்த ஓலா பைக்கை பதிவு செய்வதற்காக இன்று  குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு   எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து  ஆம்பூர் நோக்கி வந்த போது வேலூர் மாவட்டம் குருநாதபுரம் என்ற இடத்தில் இந்த பைக்  சார்ஜ் இல்லாமல்  நின்று உள்ளது. இதுகுறித்து பிரித்விராஜ்  சர்வீஸ் சென்டருக்கு கால்  செய்துள்ளார், இரண்ட மணி நேரமாகியும்  சர்வீஸ் சென்டரில் இருந்து  யாரும்  வராததாலும், ஏற்கனவே 3 முறை இந்த பைக் பழுதாகியுள்ளது.

' isDesktop="true" id="736570" youtubeid="It9MP0141pY" category="tamil-nadu">

மேலும் சார்ஜ் செய்தால்  130 கிலோ மீட்டர் வரை செல்லும் என ஓலா நிர்வாகம் உத்திரவாதம் அளித்த நிலையில், மீண்டும் மீண்டும் அதே போல் இ -பைக் பழுதாகி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவதாலும்   ஆத்திரத்தில் மருத்துவர்  ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by:Vijay R
First published:

Tags: Ola, Tirupattur