• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை - இருவர் கைது

வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை - இருவர் கைது

Youtube Video

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த வசீம் அக்ரம், மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச்செயலாளர் ஆவார். நேற்றிரவு தமது மகனுடன் பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல், வசீமை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்தனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், கொலை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டதால் கடைகள் மூடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரக் கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: