தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

ஆம்பூர் அருகே கோயில் குளத்தில் தந்தை கண்முன்னே இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், இவருக்கும் ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8), ஹரி ப்ரீத்தா (வயது 6) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் லோகேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் அடுத்த கடம்பூர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில், மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கைலாசகிரி மலையில் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்குள்ள குளத்தில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக திடீரென இரண்டு குழந்தைகளும் குளத்தில் நீரில் மூழ்கியுள்ளனர்.

    இதனை பார்த்த தந்தை லோகேஸ்வரன் அவர்களை காப்பாற்ற முயன்றுளார், எனினும் இரு குழந்தைகளும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    Also read: தாலியை கழற்றி சத்தியம்.. முந்திரிக்காட்டில் குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய மனைவி - நடந்தது என்ன?

    இந்தசம்பவம் குறித்து போலீசாருக்கு லோகேஸ்வரன் தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அங்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மலை மீது சென்று குளத்தில் மூழ்கி கிடந்த இரண்டு குழந்தைகளை சடலமாக மீட்டனர்.

    பின்னர், மலைப்பகுதியில் இருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால், காவல் உதவி ஆய்வாளர், ஹரி சிறுமியின் உடலை தோளில் சுமந்த படி கொண்டு சென்றார். சிறுவனின் சடலத்தை மற்ற காவலர்கள் டோலி கட்டி தூக்கி சென்று, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: