Home /News /tamil-nadu /

நீதிமன்ற வளாகத்தில் குட்டையாக தேங்கியுள்ள மழைநீர்: காகித கப்பல் விட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்ற வளாகத்தில் குட்டையாக தேங்கியுள்ள மழைநீர்: காகித கப்பல் விட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மழைநீரை அகற்ற கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்திற்கும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பத்தூ மாவட்டம் வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற கோரி  தண்ணீரில் காகித கப்பலை விட்டு வழக்கறிஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருங்கிணைத்த நீதிமன்ற வளாகம் அமைக்க வலியுறுத்தி 1 வாரம் நீதிமன்ற புறகணிப்பில் ஈடுபடுவதாகவும் அறிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் , வட்டாட்சியர் அலுவலகம், வணிக வரி அலுவலகம் காவல்துறை கட்டிடம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, அலுவலகங்களுக்கு செல்லும் நுழைவாயில் மற்றும் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது இதனால் நீதிமன்றத்திற்கு செல்லவும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லவும் பொதுமக்கள் தேங்கியிருக்கும் தண்ணீரை கடக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் காரை பயன்படுத்தியுள்ளேன்: வீரமணி


    மழைநீரை அகற்ற கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்திற்கும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து மழைநீரை அகற்ற கோரி வழக்கறிஞர்கள் தேங்கி இருக்கும் மழை நீரில் காகிதத்தில் கப்பலை விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் 25 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் கோரிக்கையான ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஒரு வாரம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வாணியம்பாடி பார் அசோசயேஷன் அறிவித்துள்ளது.

    செய்தியாளர்: வெங்கடேசன் - திருப்பத்தூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Lawyers, Protest, Thirupathur

    அடுத்த செய்தி