ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப்பள்ளி ஆசிரியரை வகுப்பறையில் வைத்து மிரட்டும் மாணவர்கள் - வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி

அரசுப்பள்ளி ஆசிரியரை வகுப்பறையில் வைத்து மிரட்டும் மாணவர்கள் - வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி

மாதனூர் அரசு  மேல்நிலைப்பள்ளி

மாதனூர் அரசு  மேல்நிலைப்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு பள்ளியில் 12 வகுப்பு ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சஞ்சைகாந்தி. இவர் ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு ஏ3 வகுப்பறையில் பாடம் எடுப்பதற்காக சஞ்சய்காந்தி சென்ற போது வகுப்பறையில் மாணவன் மாரி என்பவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மாணவனை எழுப்பி திருப்புதல் தேர்தலுக்காக ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தாயே என கேட்டுள்ளார். அப்பொழுது மாணவன் எடுத்து வரவில்லை என திமிராக பேசியுள்ளார். மேலும் அந்த மாணவன் ஆசிரியரை கையால் தாக்க முயற்சித்துள்ளார். அதேபோன்று ஆசிரியரை தரக்குறைவாகவும் பேசியிருக்கின்றார். மேலும், ஆசிரியரை உடனிருந்த மற்ற மாணவர்களும் தாக்க முயற்சித்து திட்டியுள்ளனர்.

அதனுடைய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் சஞ்சய்காந்தி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் தலைமையாசிரியர் வேலன் தலைமையிலான ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தின் பெயர் மாற்றம்

அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தற்பொழுது பள்ளியில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை சக மாணவர்கள் தாக்க முயற்சித்து திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: வெங்கடேசன்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ambur, Crime News, Thirupathur