• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • “இதுதான் எனக்கு கிடைத்த வெற்றி”- ஒன்றாக செல்ஃபி வீடியோ ரிலீஸ் செய்த வைரல் விவசாயியும், மாடு மேய்க்க ஓகே சொன்ன டாக்டரும்!

“இதுதான் எனக்கு கிடைத்த வெற்றி”- ஒன்றாக செல்ஃபி வீடியோ ரிலீஸ் செய்த வைரல் விவசாயியும், மாடு மேய்க்க ஓகே சொன்ன டாக்டரும்!

ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்ந்து சென்றதும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவரே திரும்பி வந்து தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என மருத்துவர் கூறினார்.

  • Share this:
‘நீங்க தடுப்பூசி போட்டுகிட்டீங்கனா ஒரு நாளைக்கு உங்க ஆடு, மாட மேய்க்கிறேன்’ என மருத்துவர் ஒருவர் கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. 28 விநாடிகளே வரும் அந்த வீடியோ இணையவாசிகள் இடையே பல விவாதங்களையும் கிளப்பியது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு இணையதளத்திற்கு எக்ஸ்கிலூசிவாக பேட்டியளித்திருந்த மருத்துவர் கெளசிக், ‘வீடியோவின் முடிவில் வருவதுபோல் கடைசியாக அந்த விவசாயி உரையாடலின் போது அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார். நான் ஒரு நாளைக்கு தனது கால்நடைகளை மேய்ப்பதற்கு ஒப்புக்கொண்ட பிறகும் அவர் உண்மையில் அந்த இடத்தை விட்டுச்சென்றுவிட்டார். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்ந்து சென்றதும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவரே திரும்பி வந்து தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது”, என்று கூறியிருந்தார்.



மருத்துவர் கெளசிக் - விவசாயி (செல்ஃபி வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுள்ளது)


அதேபோல், இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று மருத்துவர் கெளசிக் ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரலானது. அதில், “நிறைய பேர் என்னிடம் கேட்டிருந்தீங்க... கடைசியில் அந்த விவசாயி தடுப்பூசி எடுத்தாரா இல்லையானு... அன்னிக்கே அவருக்கு தடுப்பூசி போட்டுட்டேன்...

மருத்துவர் விவசாயிடம்...: தடுப்பூசி போட்ட அப்புறம் எதாவது தொந்தரவு இருக்கா உங்களுக்கு?

விவசாயி: இல்ல சார், நான் நல்லாருக்கேன்

Must Read | தூக்கம்… நோய் எதிர்ப்பு மண்டலம்… என்ன தொடர்பு? ஆய்வுகள் சொல்வது என்ன?

மருத்துவர்: தடுப்பூசி போடுறப்போ பயந்தீங்களே... இப்போ அந்த பயம் இருக்கா..?

விவசாயி: இப்போ பயம்லாம் இல்ல சார். எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கணும்... இனி கொரோனா வந்தாலும் ஒதுங்கி போயிரும்... பயப்படாம ஊசி போட்டுக்கங்க...

... என அந்த வீடியோ முடிகிறது. இதுகுறித்து கூறிய மருத்துவர் கெளசிக், தடுப்பூசிக்குப் பிறகு, அந்த விவசாயி இன்று எனது சுகாதார மையத்திற்கு வந்தார். கொரோனா தடுப்பூசி போட்டதில் அவர் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார். இது என்னுடைய வெற்றி என்று நான் கருதுகிறேன். மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன், என்றார்.

இதற்கிடையே, சில விநாடிகளே கொண்ட முதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானவுடன், ‘இந்த மனித சமூகம் மருத்துவரிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறது?’ என்றும் ‘இதுதான் சுகாதார ஊழியர்களுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதையா?’ என்றும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: