பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளை... ஒரு வாரகாலமாக கைவரிசை காட்டியவர் கைது

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளை

போலீசாரின் விசாரணையில் கைதான நபர் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வேலன் என்பதும், பிச்சைக்காரனை போல் நடித்து வீடுகளில் கொள்ளை அடித்தது இவர் தான் என்பதுவும் தெரியவந்தது.

 • Share this:
  வாணியம்பாடியில் பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பிச்சை எடுப்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து செல்லும் நபர் குறித்து வாணியம்பாடி காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.

  இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மாராபட்டு அருகே தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போலீசாரை கணடதும் தப்பி ஓடிய நபரை கைது செய்தனர்.

  போலீசாரின் விசாரணையில் கைதான நபர் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்த வேலன் என்பதும், பிச்சைக்காரனை போல் நடித்து வீடுகளில் கொள்ளை அடித்தது இவர் தான் என்பதுவும் தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: