ரேஷன் அரிசி கடத்துனேன் வண்டியை பிடிச்சுட்டாங்க.. என்ன செய்யலாம்?- தலைமை காவலரிடம் ஐடியா கேட்கும் கடத்தல்காரரின் வைரல் ஆடியோ

வாணியம்பாடி ஆடியோ விவகாரம்

அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் தலைமை காவலரிடம் பேசிய ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 • Share this:
  வாணியம்பாடியில் அடுத்தடுத்து பிடிக்கப்பட்ட 7 டன் ரேஷன் அரிசி  காவல்துறைக்கு லஞ்சம் கொடுப்பதாக  காவலரிடம் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ்  அப்பில் வைரலாகி வருகிறது

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  நியூடெல்லி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைத்து ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

  அதைதொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி 407 லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரியிலிருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தப்பி ஓடிவிட்டனர். அதில் 5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  மேலும் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்த அவர்கள் மற்றொரு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.அப்போது மினி லாரியில் இருந்த நியூடெல்லி பகுதியை சேர்ந்த  5 பேரை கைது செய்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து மினி லாரி உரிமையாளர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் வேலூர் மாவட்டம் உணவு தடுப்பு பிரிவு தலைமை காவலர் சதீஸ் என்பவரிடம் பேசிய ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

  அந்த ஆடியோவில்: நம்முடைய வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை வாணியம்பாடி காவல் துறையினர் பிடித்து விட்டனர். விடியற்காலை 4 மணிக்கு பிடித்துவிட்டார்கள். அன்னுவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து ரேஷன் அரிசி  கடத்தும்போது பிடித்து விட்டார்கள். கடந்த ஒரு வார காலமாக நான் கடத்தலுக்கு செல்லவில்லை. அன்னு என்னிடம் வந்து 40 மூட்டை மட்டும் இருக்கிறது.இதை மட்டும் எப்படியாவது அனுப்பிவிடு என்று கேட்டார்.

  அப்போது வாகன உரிமையாளர் வேலு என்பவர் வாணியம்பாடி தனிப்பிரிவு  உதவி ஆய்வாளர் பிரகாசம் என்பவருக்கு பணம் கட்டுவதாகும் அவரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டேன்  அவரும் செல்போனை எடுக்க மறுக்கிறார். 5 பேரை தற்போது கைது செய்துள்ளனர். அன்னு வீட்டில் இருந்து ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு வாகனம் புறப்படும் போது காவலர்கள் பிடித்து விட்டார்கள். ஆய்வாளர் உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் எனக்கு நெருக்கமாக உள்ளனர் என்று அன்னு சொன்னதால்  மாதக்கணக்கில் எதையுமே செய்யாது இருந்த நான்  வீட்டிற்கே வந்து கேட்டதால் இப்படி செய்து விட்டேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு 1 லோடு கடத்தி விட்டு சென்று விட்டேன் என்று பகிரங்கமாக காவலரிடம் சொல்கிறார்.  பிடிபட்ட 2 மணி நேரத்தில் மேலும்  வாகனம் பிடித்து விட்டார்கள் என்ன செய்வது சார்  என்று காவலரிடமே ஐடியா கேட்கும் அரிசி கடத்தல்காரர் இந்த ஆடியோ தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  செய்தியாளர்: M.வெங்கடேசன் ( திருப்பத்தூர் )  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: