Home /News /tamil-nadu /

வாணியம்பாடியில் குடியிருப்புக்குள் புகுந்து தண்ணீர் : பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடியில் குடியிருப்புக்குள் புகுந்து தண்ணீர் : பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சாலை மறியல் கைவிடுவதாக வாணியம்பாடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிக்குள் குடியிருப்புக்குள் புகுந்து  தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது. நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது.

    இதனால், திருப்பத்தூர் திருவள்ளுவர் நகர், ஜர்ஜிப்பேட்டை, துரைசாமி வீதி, சர்ச்தெரு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும்  பகுதியில்  நீர்நிலைகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் புகுந்தது.

    வெள்ள நீரால் கடந்த 5 நாட்களாக அப்பகுதி மக்கள் சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பார்க்க அதிகாரிகள் யாரும் வராததாலும், வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்ன- பெங்களூர், பெங்களூர்-சென்னை என இரு தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு வழித்தடத்திலும் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரு மார்கத்திலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதிலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சாலை மறியல் கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். மேலும் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருவதாகவும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை எனக் கூறி அவர்களும் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் பெண்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

    Must Read : ஆன்லைனில் போதைப் பொருள் விற்பனை - அமேசான் இந்தியா நிர்வாக இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    செய்தியாளர் - M.வெங்கடேசன்,  திருப்பத்தூர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Protest, Rain water

    அடுத்த செய்தி