முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீண்டும் பாமக கொடி பறக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்

மீண்டும் பாமக கொடி பறக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

 நீட் தேர்வால் இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் வருடம் ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வை குடியரசு தலைவர் ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

மீண்டும் பாமக கொடி பறக்க வேண்டும் என நிர்வாகிகளிடையே பேசிய அன்புமணி ராமதாஸ், திமுகவுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் ஆள மக்கள் வாய்ப்பு தர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்ணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்படவேண்டும். கடந்த 55 ஆண்டுகளாக இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டும்.  திமுகவுக்கு தற்போது மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். மீண்டும் வாய்ப்பு தர மாட்டார்கள்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற ஒரே தலைவர் ராமதாஸ் மட்டுமே. அடுத்த ஒரு மாதத்திற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாமக கட்சி கொடி பறக்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 10.5 இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட்டன. `10.5 சதவீத ஒதுக்கீடு  கிள்ளி கொடுத்த மாதிரி கொடுக்கப்பட்டது. அதையும் நீதிமன்றம் தடுத்து நிறுத்தி உள்ளது என்று பேசினார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு- தாம்பரம் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

மேலும், மாணவர்கள் ஆசிரியரை அடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலை உருவாகி உள்ளது என வேதனை தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பவங்கள் நடக்க மதுக்கடைகளே காரணம் மது கடைகளை மூடினாலே 70% பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என பேசினார்.

தமிழகத்தில் கடும் மின்வெட்டு பிரச்சனைக்கு தமிழக அரசிடம் சரியான திட்டம் இல்லாமல் போனதே என்றும் மின்வெட்டு காரணமாக, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ்,  வாணியம்பாடியிலிருந்து சேலம் அய்யோதிப்பட்டிணம் வரை சாலை விரிவாக்கம் செய்ய கடந்த 2019 ஆண்டு 524 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் தற்போது ஆமை வேகத்தில் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மத்திய அரசிடம் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் படிக்க: ஜெயலலிதா, மகாமகம் சம்பவத்தை குறிப்பிட்டு செல்வபெருந்தகை பேச்சு.. அதிமுக எதிர்ப்பு- வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார் என தெரிவித்த அன்புமணி, கொள்கை அடிப்படையில் திமுக அரசு தற்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 ஆண்டுகளில் படிப்படியாக எவ்வளவு மதுகடைகள் மூடப்படும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன்  பாலாற்றில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு தடுப்பணை கட்ட சட்டமன்றத்தில் அறிவிப்பு மட்டுமின்றி செயல்படுத்த வேண்டும்.  நீட் தேர்வால் இந்தியா முழுவதும் நீட் பயிற்சி என்ற பெயரில் வருடம் ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்து வருகின்றனர். தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வை குடியரசு தலைவர் ரத்து செய்ய வேண்டும்.

இதை படிக்க: தேர் விபத்து... அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பொறம்போக்கு இடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் கருணை உள்ளத்தோடு கையகப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.

செய்தியாளர்: வெங்கடேசன் - திருப்பத்தூர்

First published:

Tags: Anbumani ramadoss, DMK, Dr Ramadoss, PMK