• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என்கிட்டயே சேவை வரி கேட்கிறாயா.. கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த அ.தி.மு.க நிர்வாகி மகன்

என்கிட்டயே சேவை வரி கேட்கிறாயா.. கத்தியுடன் பெட்ரோல் பங்கில் ரகளை செய்த அ.தி.மு.க நிர்வாகி மகன்

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.

  • Share this:
    வாணியம்பாடி அருகே பெட்ரோல் பங்கில் 10 ரூபாய் சேவை கட்டணம் வசூல் செய்ததால் ஆத்திரத்தில் பொருட்கள் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்.  சிசிடிவி காட்சிகளை கொண்டு தலைமறைவாக உள்ள இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் - ஜமுனாமத்தூர் செல்லும் சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் உள்ளது.இந்த பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் நவீன்குமார். இவர் பூங்குளம் பகுதியை சேர்ந்தவர்.  இந்நிலையில் ஆலங்காயம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த ஆலங்காயம்  பேரூராட்சி முன்னாள் அ.தி.மு.க செயலாளர் பாண்டியன் என்பவரது மகன் பாரதி (வயது 24) என்பவர் நண்பர்களுடன் வந்து அவசரமாக பணம் தேவைப்படுகிறது போன்பே மூலம் 500 ரூபாய் உங்களுக்கு அனுப்புகிறேன் எனக்கு கையில் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    Sasikala Audio: ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே தேர்தல் தோல்விக்கு காரணம் - குற்றஞ்சாட்டும் சசிகலா

    அப்போது மேலாளர் நவீன்குமார் 500 ரூபாய் பணம் கொடுத்து போன்பே மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் 1 மணி நேரம் கழித்து மீண்டும் பாரதி மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் வந்து மீண்டும் போன்பே மூலம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர் அப்போது என்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டேன் தற்போது பெட்ரோல் பங்க் கணக்கில் இருந்து பணம் தர வேண்டும் என்றால் அதற்கு 10 ரூபாய் சேவை வரி பிடிப்பார்கள் என்று சொல்லியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பரவாயில்லை என்று சொல்லிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு சென்ற அவர் மீண்டும் சிறிது நேரத்தில் வந்து  என்னிடமே சேவை வரி கேட்கிறாயா என்று ஆத்திரமடைந்த பாரதி பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த லேப்டாப் தூக்கி போட்டு உடைத்து அங்கிருந்து மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.

    Also Read: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    கையில் கத்தியுடன் பெட்ரோல் பங்க் முழுவதும் வலம் வந்ததால் பயந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர் இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் நவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய பாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    திருப்பத்தூர் செய்தியாளர்: M.வெங்கடேசன்


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: