முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாருடன் தகராறில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாருடன் தகராறில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்

போலீஸாருடன் தகராறு செய்த நபர்

போலீஸாருடன் தகராறு செய்த நபர்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளருடன் சண்டை போட்ட நபரை போலீஸார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

வாணியம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளிய நபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன்  தலைமையில் போலீசார் செட்டியப்பனூர் கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது வாணியம்பாடியில் இருந்து சின்ன வேப்பம்பட்டு நோக்கி  பொறியாளர் முரளிதரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டு இருந்தார்.அப்போது அவர் வந்த இருசக்கர வாகனத்தை போலீஸார் நிறுத்தி உள்ளனர்.

இதனை கண்டுகொள்ளாமல் முரளிதரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த முரளிதரன் வாகனத்தின் ஆவணங்களை  கொண்டு வந்து உதவி ஆய்வாளரிடம் காண்பித்து அதனை செல்போனில் படம் பிடித்துள்ளார். தன்னை ஏன் படம் பிடிக்கிறாய் என உதவி ஆய்வாளர் கேட்ட போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது,  ஒரு கட்டத்தில் அவர் செல்போனில்  படம் பிடித்ததை போலீசார் தடுத்த போது உதவி ஆய்வாளர் குணசேகரனும் முரளிதரனும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சாலையில் கட்டிபுரண்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பொதுமக்கள் போலீசாரிடம்  இருந்து தப்ப முயன்ற முரளிதரனை பிடித்து அங்கிருந்த ஒரு கம்பத்தில் கட்டினர்.  பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை கிராமிய காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: M.வெங்கடேசன் (திருப்பத்தூர்)

First published:

Tags: Crime News, Police, Thirupathur, Vaniyambadi