செல்பி எடுக்க டிராக்டர் ஓட்டிய இளைஞர்.. கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்

சஞ்சீவி

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், பார்த்தபோது 60 அடி ஆழ கிணற்றில் டிராக்டர் மூழ்கியிருந்தது.

 • Share this:
  திருப்பத்தூரில் டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்ததில் அதை ஓட்டிச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் 18 வயதான சஞ்சீவி. இவரது உறவினரான சவுந்தரராஜன் அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவர் விவசாய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தார்.

  பின்னர் டிராக்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு உணவருந்த சென்றார். அப்போது டிராக்டரை ஓட்ட சஞ்சீவிக்கு ஆசை ஏற்பட்டது. டிராக்டரில் ஏறி அமர்ந்ததும் தான் அதை ஓட்டுவது போல் பதிவு செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்தார். தொடர்ந்து டிராக்டரை ஓட்டினார். ஆனால் போதிய அனுபவம் இல்லாததால் அவரது கட்டுப்பாட்டை மீறி தறி கெட்டு ஓடிய டிராக்டர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது.

  சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், பார்த்தபோது 60 அடி ஆழ கிணற்றில் டிராக்டர் மூழ்கியிருந்தது. தீயணைப்புத் துறையினர் அங்கு வருவதற்குள் சஞ்சீவியின் உயிர் பிரிந்தது. அவர்கள் சஞ்சீவியின் உடலை கயிறு கட்டி மேலே எடுத்தனர். கிணற்றில் விழுந்த வேகத்தில் டிராக்டரும் இரு பாதியாக உடைந்தது. அதையும் கிரேன் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மேலே கொண்டு வந்தனர். 4 மணி நேரம் நடந்த மீட்புப்பணியை பார்வையிட ஊர் மக்கள் திரண்டனர். இவ்விபத்து குறித்து அம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Shalini C
  First published: