நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்லில், வார்டு உறுப்பினர் பதவிக்கு சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரி, பதவி ஏற்க அனுமதிக்க கோரி அவரது மனைவி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். நாற்பத்து ஐந்து வயதான் இவர் மீது சாராயம் விற்பனை செய்ததாக வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கிருஷ்ணன், ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியின் 9ஆவது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அவருககு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை எதிர்த்து அதே வார்டில் 4 பேர் போட்டியிட்டனர். கடந்த 3 ஆம் தேதி லாலாஏரி பகுதியில், லாரி டியூப்கள் மற்றும் கேன்களில் 150 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்ததாக கிருஷ்ணனை வாணியம்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, பதிவான 373 வாக்குகளில், கிருஷ்ணன் 194 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், கிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி, குடும்பத்தினருடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் ஓர் மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில், தன் கணவர் சாராயம் விற்பனை செய்து தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், தற்போது காவல் துறையினர் பொய் வழக்குப்போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர் என்றும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க அனுமதித்து தக்கவழி வகை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கிலிருந்து அவரை காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Must Read : ‘புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?’ - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!
ராஜேஸ்வரி அளித்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2021